எந்த இடத்திலும் லஞ்சம், முறைகேடுகள் இருக்காது - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

தகுதியின் அடிப்படையில் மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறும் என நிர்மல்குமார் தெரிவித்தார்.
நிர்மல்குமார்
Published on

சென்னை,

அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மெரிட் அடிப்படை நியமனம்

நீதிமன்றங்களை நீதிபதிகள் சிறப்பாக நடத்துவதற்கும், உயர்பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர்கள் மிகவும் நேர்மையாக, நியாயமாக, மெரிட் அடிப்படையில் நியமிக்கப்படும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

எந்தவித பாகுபாடு, குறுக்கீடு இல்லாமல் மெரிட் அடிப்படையில் நடைபெற்றது. நீதிபதிகள் சிறப்பாக நீதிமன்றங்களை நடத்த அரசு வழக்கறிஞர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்கள் மிகப்பெரிய தூண்

கடந்த காலங்களில் அரசியல் குறுக்கீட்டினாலும், தவறான முறைகளிலும் பல உயர்ந்த பதவிகள் பல கோடிகளைக் கொடுத்து பெறப்பட்டதாக என்னிடம் பலர் தெரிவித்தனர். உண்மையில் ஒரு அரசு சிறப்பாக செயல்பட்டாலும், நீதிபதிகள் நீதியை வழங்க வேண்டும் என நினைத்தாலும், அரசு வழக்கறிஞர்கள் அதற்கு மிகப்பெரிய தூண். அந்த இடத்தில் குறுக்கீடுகளை சரிசெய்யும் பணியை முதல்-அமைச்சர் எங்களிடம் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தற்காலிகமாக ஐகோர்ட்டில் நீதிபதிகளை நியமித்து வருகிறோம். பல முன்னாள் நீதிபதிகளை அழைத்து, 40 வருடங்களுக்குப் பின்னர் மெரிட் அளவில் நியமிக்கப்படுவதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக முன்னாள் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முறைகேடுகள் இருக்காது

எந்த இடத்திலும் லஞ்சம், முறைகேடுகள் இருக்காது. நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட அரசு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு நீதிமன்றங்களுக்கு தூணாக விளங்க வேண்டும்.

தகுதியின் அடிப்படையில் மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறும். தகுதியில்லாமல் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் இனி நடக்காது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com