ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள்: அருள் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு


ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள்: அருள் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு
x

ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இதனால், இருவரும் இரு அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர். பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு தரப்பினர் ராமதாசுக்கும், மற்றொரு தரப்பினர் அன்புமணிக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டது தொடர்பான புகாரில் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. ராமதாஸ் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை அன்புமணி ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். ஒட்டுக்கேட்பு கருவி விவாகரத்தில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

ராமதாஸ் கொலை செய்யப்படுவார் என அன்புமணி தரப்பினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம் ராமதாசை கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டனர். அதுதான் எங்களுக்கு பயமாக இருக்கிறது. இதுதொடர்பாக இன்று மீண்டும் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story