சென்னை விமான நிலையத்தில் ரூ.97 ½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்ல வந்தவரிடம் இருந்து ரூ.97 ½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.97 ½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஷார்ஜாவுக்கு செல்ல வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் (வயது 30) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த கைப்பையில் உள்ள ரகசிய அறையில் கட்டுக்கட்டாக சவுதி ரியால்களை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.97 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாசிம் அக்ரமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com