

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.5 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 24 கிடைத்தது. மேலும் 1 கிலோ 236 கிராம் தங்கமும், 34 கிலோ 262 கிராம் வெள்ளிப் பொருட்களும், 2,102 வெளிநாட்டு பண நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.