திருக்கோவிலூர் நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாததால் 20 கடைகளுக்கு சீல் வைப்பு

திருக்கோவிலூர் நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாததால் 20 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருக்கோவிலூர் நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாததால் 20 கடைகளுக்கு சீல் வைப்பு
Published on

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் பஸ் நிலையம் அருகே 5 முனை சந்திப்பில் உள்ளது. இதில் கட்டப்பட்டுள்ள 20 கடைகளை நகராட்சி நிர்வாகம் மாத வாடகைக்கு விட்டுள்ளது. இந்த நிலையில் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் சுமார் 12 ஆண்டுகளாக மாத வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தும் இதுவரை வாடகை பணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கீதா உத்தரவின்பேரில் நகராட்சி பணியாளர்கள் நேற்று வணிக வளாகத்தில் வாடகை பாக்கியை செலுத்தாத 20 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது வாடகை பாக்கி நிலுவையை விரைவில் செலுத்த வேண்டும் என கடை நடத்தி வந்தவர்களிடம் அறிவுறுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com