திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா; திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து கொண்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா; திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Published on

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆடி கிருத்திகை திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் கவிதா அறிவித்து உள்ளார்.

உள்ளூர் விடுமுறை

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும், பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு நாளை (6-ந்தேதியன்று) அரசு செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு 8-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து கொண்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com