திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று ஆன்-லைனில் டிக்கெட் விநியோகம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.inஎன்ற கோயில் இணையதள முகவரியில் இன்று காலை 10 மணி முதல் பதிவு செய்யலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை 1800 425 3657 என்ற எண்ணிலும் அறிந்து கொள்ளலாம் என்றும், ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பல பகுதிகளில் இருந்து 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com