திருவண்ணாமலை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வக்கீல் கைது

பெண்ணை வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வக்கீல் கைது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் கார்த்திக் (வயது 27). வக்கீலாக உள்ளார். நேற்று முன்தி னம் இவர் நான்கு குழந்தைகளின் தாயான 26 வயது பெண்ணை வீடு புகுந்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை தண்டராம் பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com