திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் - அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

2 ஆண்டுகளுக்குப் பிறகு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் - அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்ட திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com