திருவெறும்பூர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தரிசனம்

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவெறும்பூர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தரிசனம்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவின்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com