"இதுவே வரலாற்றில் முதல்முறை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த செய்தி

கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2 போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
"இதுவே வரலாற்றில் முதல்முறை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த செய்தி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2 போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டுகளை கண்காணிக்கவும், பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.

முன்னதாக பேருந்து வழித்தடத்தைத் துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறிது தூரம் பேருந்தில் பயணித்து மகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com