”இது விஜய் மாடல் அரசு.. எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது" - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேச்சு

சட்டசபையில் இதுவரை இல்லாத வகையில் அதிக இளைஞர்கள் உள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
”இது விஜய் மாடல் அரசு.. எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது" - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேச்சு
Published on

சென்னை,

விஜய் மாடல் அரசு

எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாமில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது;

"17வது சட்டசபையில் 146 புதிய எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர். சட்டசபையில் இதுவரை இல்லாத வகையில் அதிக இளைஞர்கள் உள்ளனர். நல்லரசு அமைந்துள்ளது. இந்த அரசு விஜய் மாடல் அரசு. எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது. என்னாகுமோ ஏதாகுமோ என கதிகலங்கிக் கிடந்த மக்களுக்கு, புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்த மாபெரும் தலைவர் முதல்-அமைச்சர் விஜய்.

இந்த சட்டசபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சட்டங்களும் இந்தியாவின் பல சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. இந்தியா வியந்து போற்றி பாராட்டும் பல திட்டங்களை இந்த தமிழகம் தந்திருக்கிறது. அந்த வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர் முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றை நூலகத்திற்கு சென்று படிக்க வேண்டும், சட்டசபை நடைமுறைகள், விதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு வல்லுநர்கள் வழிகாட்டுவார்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com