

தூத்துக்குடி,
முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம்-II தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரபட்டி விலக்கு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் மாடசாமி(எ) கோபால் (வயது 55) என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி முக்காணி பகுதியைச் சேர்ந்தவர்களான அப்புகுட்டி(எ) வீரபுத்திரன் மகன்களான மல்லி(எ) மலையாண்டி(38), முத்து(எ) பழைய முத்து(42) மற்றும் அய்யாதுரை(எ) பூவன் மகன் மாரியப்பன்(எ) முண்டன்(38) ஆகிய 3 பேரையும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றம்-II-ல் (ADJ-II) நடைபெற்ற வந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா நேற்று (5.10.2026) மல்லி(எ) மலையாண்டி, முத்து(எ) பழையமுத்து மற்றும் மாரியப்பன்(எ) முண்டன் ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா ஆயுள்தண்டனை மற்றும் மொத்தம் ரூ.17,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.