தூத்துக்குடி: வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி- 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர்.
2 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ சிகிச்சை

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டின் கதவு உடைப்பு

அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சுந்தரபாண்டியன் வீட்டின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊருக்கு திரும்பி வந்து பார்த்த சுந்தரபாண்டியன், வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்தார்.

திருட்டு முயற்சி

வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் சுந்தரபாண்டியன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் காயல்பட்டினம், ரத்தினாபுரியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (வயது 36) மற்றும் முத்துசாமி(39) என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இந்த நிலையில் காயல்பட்டினம் பகுதியில் மற்றொரு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றித் திரிந்த கார்த்திக்ராஜா, முத்துசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com