தூத்துக்குடி: "போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கைப்பந்து போட்டி- எஸ்.பி. பரிசு கோப்பை வழங்கல்


தூத்துக்குடி: போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி- எஸ்.பி. பரிசு கோப்பை வழங்கல்
x

தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் அடிப்படையில் அதனை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையே விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக நேற்று (27.5.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார்புரம் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் அணியினரான CVC அணி, St.சேவியர்ஸ் A, St.சேவியர்ஸ் B, North கோஸ்டல், SDAT ஆகிய 6 அணியினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க நிகழ்வாக அனைத்து அணி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி., தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் உட்பட காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டியை மாவட்ட எஸ்.பி. துவக்கி வைத்தார்.

பின்னர் இந்நிகழச்சியின் நிறைவாக மாவட்ட எஸ்.பி. போதை பொருட்களால் ஏற்படும் அபாயம் குறித்தும், இளைஞர்கள் போதை பொருட்களை தவிர்த்து தங்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அவர் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்று முதல் இடத்தை பிடித்த CVC அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

1 More update

Next Story