தூத்துக்குடி: மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடியில் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் கணவர் பணம் கேட்டபோது அவர் கொடுக்காததால், கோபத்தில் கணவர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
தூத்துக்குடி: மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள சில்லாங்குளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நாகராஜன் (வயது 35), சமையல் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்து பழக்கம் இருந்துள்ளது. கடந்த 18ம் தேதி வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் பணம் கொடுக்காததால் கோபத்தில் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி உடனடியாக ஆட்டோ மூலம் கோவில்பட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com