தூத்துக்குடி: கால்வாயில் தவறி விழுந்த வக்கீல் சாவு

கயத்தாறு பகுதியில் வக்கீல் ஒருவர் சிலிண்டர்கடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி: கால்வாயில் தவறி விழுந்த வக்கீல் சாவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தையா மகன் முருகன் (வயது 42), வக்கீல். இவர் சம்பவத்தன்று, கயத்தாறு சிலிண்டர் கடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்துபோன முருகனுக்கு ஜோதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com