தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

பசுவந்தனை பகுதியில் மூதாட்டியை குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர் கொலை செய்தார்.
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
Published on

கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு(55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் நேற்று (23.5.2025) குற்றவாளியான நல்லகண்ணு என்பவருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் கவிதா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com