தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம்: இன்று மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று மின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று மின் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம்; மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு இன்று நகரின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று (3.11.2026) காலை 8 மணியளவில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று காலை 7.30 மணி முதல் மதியம் 3 மணி வரை டூவிபுரம், சண்முகபுரம் மற்றும் பீச்ரோடு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட சிவன் கோவில் உயரழுத்த மின்தொடரில் மின்னூட்டம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

அதன்படி ரெங்கநாதபுரம், சிவன்கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, ரத வீதிகள், தெப்பக்குளம் தெரு, கிப்சன்புரம், T.ராமசாமி தெரு, வ.உ.சி. ரோடு, செல்விஜர் தெரு, WGC ரோடு, பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

தேரோட்டம் பாதுகாப்பாக நடைபெற மின்வாரியம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கும் மின் விநியோகத் தடைக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X