தூத்துக்குடி: எந்திரத்தில் சேலை சிக்கியதால் பெண் சாவு


தூத்துக்குடி: எந்திரத்தில் சேலை சிக்கியதால் பெண் சாவு
x

தூத்துக்குடியில் கிரசர் எந்திரம் மூலம் சீனவரைக்காய் செடிகளை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருளாயியின் சேலை எந்திரத்தில் சிக்கியது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ரெகுராமபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி இருளாயி (வயது 65). இவர்களுக்கு குழந்தையில்லை. கருப்பசாமி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இருளாயி அதே பகுதியில் உள்ள பால்ராஜ் மகன் கார்த்திக்(35) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த தோட்டத்தில் வௌவால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மேகலிங்கம்(50) என்பவருக்கு சொந்தமான கிரசர் எந்திரம் மூலம் சீனவரைக்காய் செடிகளை பிடுங்கும் பணி நடந்துள்ளது.

அப்போது வேலை பார்த்து கொண்டிருந்த இருளாயியின் சேலை எந்திரத்தில் சிக்கியது. அதில் அவரது உடல் பல துண்டுகளாக சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடல் பாகங்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story