அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் பாமகவில் இருந்து நீக்கம்-ராமதாஸ் அறிவிப்பு


அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் பாமகவில் இருந்து நீக்கம்-ராமதாஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2026 10:05 AM IST (Updated: 12 Jan 2026 11:41 AM IST)
t-max-icont-min-icon

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை,

பாமகவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது.அப்போது ஏற்பட்ட மோதல் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உச்சத்தை சந்தித்திருக்கிறது. தொடர்ந்து இறுதி தரப்பும் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர்.தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இதனை ராமதாஸ் மறுத்து வருகிறார்.

இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பினரை நீக்கி வருகிறார்கள். இந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்களான மூன்று எம்.எல்.ஏக்களை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். சிவக்குமார்,சதாசிவம்,வெங்கடேஷ்வரன் ஆகிய மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேர் மீது ராமதாஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 More update

Next Story