

தூத்துக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த 2 இளம்பெண்கள் உள்ளிட்ட 3 பேர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். மாரியம்மாள் வீட்டிற்குள் தண்ணீர் எடுக்க சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அந்த கும்பல், மூதாட்டியின் கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவி அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1 சவரன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.
இந்த சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன் (வயமு 25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடியில் பதுங்கியிருந்த மேற்சொன்ன 3 பேரையும் பிடித்த தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஒரு அடகுக் கடையில் அடகு வைத்திருந்த நகைகளையும் போலீசார் மீட்டனர்.