ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளிமாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்க சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளிமாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அருகே திருவிக நகரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களான பார்த்திபன்(12), நித்திஸ்(14), மற்றொரு சிறுவன் என 3 பேரும் சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்றனர்.

மூன்று மாணவர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மட்டும் ஆழமான பகுதியில் சிக்கினர். இதனைகண்ட இரண்டு மாணவர்களும் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் நீரில் முழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை ஒவ்வொருத்தராக மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.

மாணவர்களின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சிப்காட்போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com