தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. எனினும், பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வளிமண்டல அடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனத்தினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் யாரும் அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com