திண்டிவனம்: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம்: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
Published on: 

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பலத்த மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

திண்டிவனத்தை அடுத்த மோழியனூரில் மூதாட்டி பாஞ்சாலி (60) குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாஞ்சாலி வசித்து வந்த குடிசை வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய பாஞ்சாலி உயிரிழந்தார். பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் பழைய வீடுகள் மற்றும் பலவீனமான சுவர்களைக் கொண்ட குடியிருப்புகளில் வசிப்போர் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com