கியாஸ் அடுப்பை ஆய்வு செய்ய வரும் டிப்-டாப் ஆசாமிகள்

கியாஸ் அடுப்பை ஆய்வு செய்ய வரும் டிப்-டாப் ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கியாஸ் அடுப்பை ஆய்வு செய்ய வரும் டிப்-டாப் ஆசாமிகள்
Published on

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கியாஸ் நிறுவனத்தில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டில் கியாஸ் அடுப்பு முறையாக இயங்குகின்றனவா?, ரெகுலேட்டர் சரியாக உள்ளனவா? என சரி பார்க்க வந்திருக்கிறோம். இதற்கு ஓராண்டு சந்தா தொகை ரூ.250 என கூறி பொதுமக்களிடம் வீடு வீடாக சில டிப்-டாப் ஆசாமிகள் கேட்டு வருகின்றனர். வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிலர் உண்மை என நம்பி ரூ.250 செலுத்தி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்று வரும் நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியானவர்களா? என உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்தாக வேண்டும் என்ற பட்சத்தில் கியாஸ் சிலிண்டர்கள் இறக்கும் நபர்களுடன் வந்து இது போன்ற ஆய்வுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com