திருச்சி: சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி: சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராகவேந்திரபுரம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தால் மூதாட்டி விஜயலெட்சுமி அதிர்ச்சியும், மன உளைச்சலுக்கும் ஆளானார். பின்னர், இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com