திருநெல்வேலி: கோவிலில் வெண்கலமணி திருடிய 2 பேர் கைது

தேவர்குளம் பகுதியில் கோவில் நிர்வாகி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த வெண்கலமணியை காணவில்லை.
திருநெல்வேலி: கோவிலில் வெண்கலமணி திருடிய 2 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், மேலஇலந்தகுளம், சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 41), மேல இலந்தைகுளம் நீர்கிணறு மாடசாமி கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ம்தேதி ராமகிருஷ்ணன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த வெண்கலமணியை காணவில்லை.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் லூக் அசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த பாலாஜி(25), கார்த்திக்(22) ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவிலில் உள்ள வெங்கலமணியை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மேற்சென்ன 2 பேரையும் நேற்று (21.6.2025) கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து வெங்கலமணியை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com