திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வைணவபெருமாள், இசக்கிமுத்து ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் குற்றவாளிகள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டடத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், வைணவபெருமாள், இசக்கிமுத்து ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று (27.5.2025) அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com