திருநெல்வேலி: கொலை, கொள்ளை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ராதாபுரம் பகுதியில் 3 பேர் கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: கொலை, கொள்ளை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கூடங்குளம், காந்திநகரை சேர்ந்த சித்திரைசெல்வன் மகன் லிங்குசாமி (வயது 22), கூடங்குளம், சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மார்க் மகன் வினோத்(39), திசையன்விளையை சேர்ந்த சுடலைமணி மகன் அருண்குமார்(21) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்சொன்ன 3 பேரும் கொலை, கொலை முயற்சி, அடிதடி, திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரெகுராஜன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் லிங்குசாமி, வினோத், அருண்குமார் ஆகிய 3 பரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com