திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது


திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2025 11:34 PM IST (Updated: 25 Jun 2025 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருநெல்வேலியில் நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நபருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சீமாகுமாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் ஏட்டு முத்துராமலிங்கம் ஆகியோர் தீவிர தேடுதல் நடத்திய நிலையில், சீமாகுமாரியை நேற்று கைது செய்தனர்.

நகை மோசடி செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

1 More update

Next Story