திருநெல்வேலி: கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு.
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி சிக்கியது.

வனத்துறையினர் கண்காணிப்பு பணி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அதன்படி அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரடி கூண்டில் சிக்கியது

நேற்று முன்தினம் இரவில் அந்த கூண்டில் ஒரு கரடி சிக்கியது. தொடர்ந்து கரடியை கூண்டோடு வாகனத்தில் ஏற்றி பாபநாசம் அருகே கொடமாடி பீட் வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு கூண்டை திறந்ததும் கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com