திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது


திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது
x

திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், துறையூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 37), பிரியா(32) ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர். விஜயகுமார் அடிக்கடி பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக பிரியா, விஜயகுமாரை பிரிந்து கடந்த சில மாதங்களாக மேலதாழையூத்து, ஸ்ரீநகரில் வீடு எடுத்து தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (21.5.2025) பிரியா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த விஜயகுமார் பிரியாவை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி, அரிவாளால் தாக்க முயற்சி செய்து மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பிரியா தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விஜயகுமாரை நேற்று (22.5.2025) கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

1 More update

Next Story