திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது

ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்த சுவிகரன் (வயது 50) என்பவர் குடிபோதையில் தனது மனைவி லதா(48), மகன் சுமன்(20) ஆகியோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டில் பிரச்சினை செய்த சுவிகரன் தனது மனைவி லதாவை தாக்கியுள்ளார். இதையடுத்து ஏற்பட்ட தகராறின்போது லதா, அவரது மகன் சுமன் மற்றும் லதாவின் உடன்பிறந்த சகோதரி சுபா(40) ஆகியோர் சேர்ந்து சுவிகரனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா தலைமையில், ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் விரைவாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேரையும் விரைவாக கைது செய்ததற்கு, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், டி.எஸ்.பி. தர்ஷிகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் மற்றும் காவல் துறையினரை பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com