திருநெல்வேலி: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சிங்கம்பாறை, பொன்விழா நகரை சேர்ந்த மைக்கேல் அமிர்தபனி மகன் அஜய்அன்பரசு (வயது 27) சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து முக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அக்னல்விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட அஜ்யஅன்பரசை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com