திருப்பதி - காட்பாடி பயணிகள் மெமு ரெயில் ரத்து

பராமரிப்பு பணி நடைபெறுவதால், சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
மெமு ரெயில்
Published on

சென்னை,

திருப்பதி - காட்பாடி பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முழுவதுமாக ரத்து

திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் மெமு ரெயில் வரும் 19, 22, 26, 29 மற்றும் ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இரவு 7.25 மணிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரெயில் வரும் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு காலை 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரெயில் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு மாலை 5.15 மணிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரெயில் வரும் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியளவு ரத்து

இதேபோல், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16854) வரும் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது. காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16853) வரும் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் திருப்பதி - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. காட்பாடியில் இருந்தே விழுப்புரம் நோக்கி புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com