திருப்பத்தூர்: பணியில் இருந்த ஆயுதப்படை ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலூர் பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆய்வாளர் கணேஷ் பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






