திருவள்ளுவர் தினவிழா

சங்கராபுரத்தில் திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது.
திருவள்ளுவர் தினவிழா
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் நகர திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு திருக்குறள் பேரவை தலைவர் டாக்டர் குமணன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் குணா, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் லட்சுமிபதி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஆவின் ஒன்றியக்குழுதலைவர் ஆறுமுகம் விழாவை தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் உருவ படத்தை பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணிதாகப்பிள்ளை திறந்து வைத்தார். திருவள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி பற்றி பாடலாசிரியர் அறிவுமதி சிறப்புரையாற்றினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்வழி கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்பதமிழர், பேரவை துணை தலைவர் கதிர்வேல், பொருளாளர் சாதிக்பாஷா, தொழிலதிபர் சுலைமான், தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சுப்புராயன், சவுந்தரராஜன், ஆராவமுதன், மதிவாணன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், நிர்வாகிகள் வேலு, செல்வராஜ், சிட்டிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com