TN Assembly Election | தமிழக சட்டசபை தேர்தல்; பிற்பகல் 3 மணி நிலவரம்?

TN Assembly Election | தமிழக சட்டசபை தேர்தல்; பிற்பகல் 3 மணி நிலவரம்?

5.73 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற மொத்தமாக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - வைகோ பேட்டி

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என வாக்கு செலுத்திய பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குடும்பத்தினருடன் தனது வாக்கை பதிவு செய்தார் எம்.பி. விஜய் வசந்த்

வாக்களித்தார் நடிகர் பரத்..!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் பரத்.

வாக்களித்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

திருவள்ளூர் அகரமேல் ஊராட்சியில் வாக்களித்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

சென்னை தியாகராயர் நகரில் வாக்களித்தார் நடிகர் சிலம்பரசன்

3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில் 80.67% வாக்குகள் பதிவு

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில் 80.67%, குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை தொகுதியில் 56.15% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தான் வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்தார் பின்னணி பாடகி சைந்தவி

வாக்களித்தார் இயக்குநர் வசந்தபாலன்

வாக்களித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் இயக்குநர் வசந்தபாலன்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு சதவீதம் மற்றும் பதிவான மொத்த வாக்குகள்

தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை 4,01,40,304 பேர் வாக்களித்துள்ளனர்.

* சென்னையில் வாக்குப்பதிவு -68.13%

* வாக்குப்பதிவு அதிகமாக உள்ள மாவட்டம் - நாமக்கல் 76.43%

* வாக்குப்பதிவு குறைவாக உள்ள மாவட்டம் - கன்னியாகுமரி 61.95%

வாக்குச்சாவடிக்குள் போலீஸ் நுழையக்கூடாது: டிஜிபி

* வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.

* காவலர்கள் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று கடமையாற்ற வேண்டும்.

* விதிமுறைகளை காவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பிற்பகல் 3 மணி நிலவரம்

தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

வாக்களித்தார் பின்னணி பாடகர் க்ரிஷ்

தான் வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்தார் பின்னணி பாடகர் க்ரிஷ்.

வாக்களித்தார் நடிகர் அரவிந்த்சாமி

சென்னையில் வாக்களித்தார் நடிகர் அரவிந்த் சாமி.

வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய நடிகர் சூரி

தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்

“இந்த தேர்தல் மட்டும் இல்ல.. எல்லாத் தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்..” -வாக்களித்த பின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

வாக்களித்த ஷங்கர், அதிதி

சென்னையில் வாக்களித்த இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது மகள் நடிகை அதிதி ஷங்கர்

வாக்களித்தார் வெங்கட் பிரபு..!

வாக்களித்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

வாக்களித்தார் ரம்யா பாண்டியன்..!

வாக்களித்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

வெறிச்சோடி காணப்படும் சென்னை...!

வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள சென்னையின் முக்கிய சாலைகள் இன்று வாக்குப்பதிவு நாள் என்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

வாக்களித்த ஆதி, நிக்கி கல்ராணி

எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகை நிக்கி கல்ராணி நடிகர் ஆதி வாக்களித்தனர்.

வாக்களித்தார் சிம்ரன்..!

"வாக்களிப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பொறுப்பும் கூட" - தான் வாக்களித்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் நடிகை சிம்ரன்

வாக்களித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை தி.நகரில் வாக்களித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வில்லிவாக்கம் தொகுதியில் வாக்களித்தார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

விஜய் - ஸ்டாலின் - பழனிசாமி - சீமான் தொகுதி நிலவரம் :

மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொகுதியில் பதிவான வாக்கு சதவீத நிலவரம்

சென்னை மாவட்டத்தின் வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுசதவீதம் 37.16 ஆகும்.

2026-ம் ஆண்டு நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள் எவை..?

தமிழகம் முழுவதும் இதுவரை 3,25,79,3269 வாக்குகள் பதிவாகி உள்ளது. (பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம்)

அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்கள்:-

திருப்பூர் - 62.97 சதவீதம்

நாமக்கல் - 62.51 சதவீதம்

ஈரோடு - 61.79 சதவீதம்

சேலம் - 61.42 சதவீதம்

கரூர் - 60.77 சதவீதம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு - பிற்பகல் 1 மணி நிலவரம் என்ன..?

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. முன்னதாக 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. (வித்தியாசம்: 16 சதவீதம் அதிகம்)

இதுவரை பதிவான வாக்குகள்: 3,25,79,3269

மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 193வது வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக கூறப்படுகிறது. உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவி ஜோதிகாவுடன் வந்து வாக்களித்தார் நடிகர் சூர்யா

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மனைவி ஜோதிகாவுடன் வந்து நடிகர் சூர்யா ஜனநாயக கடமையாற்றினார்.

ஜனநாயக கடமையாற்றினார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஜனநாயக கடமையாற்றினார்.

எங்கள் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் - ஓ,பன்னீர் செல்வம்

தேனி பெரியகுளத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், முன்னாள் முதல்-அமைச்சரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது வாக்கை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை காண முடிகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவார். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

ஜனநாயக கடமை ஆற்றினார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் ஜனநாயக கடமை ஆற்றினார்.

காலை11 மணி நிலவரப்படி அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்கள் எவை..?

தமிழகம் முழுவதும் இதுவரை 2,15,40,712 வாக்குகள் பதிவாகி உள்ளது. (காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம்)

அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்கள்:-

திருப்பூர் - 42.45 சதவீதம்

நாமக்கல் - 41.41 சதவீதம்

ஈரோடு - 41.00 சதவீதம்

சேலம் - 40.56 சதவீதம்

கரூர் - 39.70 சதவீதம்

சென்னை: காலை 11 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் திருவிழா: விறுவிறுப்பான வாக்குப்பதிவு - காலை 11 மணி நிலவரம் என்ன..?

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: (11 மணி நிலவரம்)

இதுவரை பதிவான வாக்குகள்: 2,15,40,712

மொத்த வாக்களர்கள்: 5,73,43,291

முன்னதாக 2021 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

தேர்தல் வார் ரூமை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கழக நிர்வாகிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் களத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை (War Room) அமைக்கப்பட்டுள்ளது.

திமுக கட்சியினர் தங்களது தேர்தல் தொடர்பான சந்தேகங்களை கேட்கவும், புகார்கள்- கருத்துகளைத் தெரிவிக்கவும் 08069446900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வார் ரூமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். வார்ரூமை பார்வையிட்ட முதல்-அமைச்சர் வந்துள்ள அழைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

நாங்குநேரியில் பெரும்பத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்நிலையில் 10.30 மணி நிலவரப்படி நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290வது பூத்தில் 969 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் : தனது வாக்கை பதிவு செய்தார் நடிகை திரிஷா

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகை திரிஷா தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஜனநாயக கடமையாற்றினார் கனிமொழி எம்.பி.

சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாமக்கல்: மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு வந்து புதுமண தம்பதி, தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.

ஜனநாயக கடமையாற்றிய நடிகர் சரத்குமார் , ராதிகா

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் அவரது மகன் ராகுல் சரத் ஆகிய மூவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “மக்கள் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது முக்கிய கடமை. 100% வாக்கு அவசியம். எனது மகன் முதல் முறையாக வாக்கு செலுத்தி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது” என்று கூறினார். விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நான் இங்கு ஓட்டு போட தான் வந்திருக்கிறேன் யாரைப் பற்றியும் பேச வரவில்லை என்று கூறினார்.

சட்டமன்ற தேர்தல்: தனது வாக்கை பதிவு செய்தார் எல்.கே.சுதீஷ்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தனது குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

ஜனநாயக கடமையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி: தமிழிசை - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்

சென்னை மயிலாப்பூர் தொகுதி ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை - திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடையாள அட்டை இல்லாமல் வாக்களிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்ட, திமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால், கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தினர்.

ஜனநாயக கடமையாற்றினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.

சட்டமன்ற தேர்தல் : தனது வாக்கை பதிவு செய்தார் ஜி.கே. வாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை மேல்நிலைபள்ளியில், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன், தனது வாக்கை பதிவு செய்தார்.

ஜனநாயக கடமையாற்றினார் எல்.முருகன்

கோயம்பேடு வாக்குச்சாவடியில் மத்திய இணை மந்திரி டாக்டர் எல்.முருகன் ஜனநாயக கடமையாற்றினார்.

தமிழ்நாடு வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:- (காலை 9 மணி நிலவரம்)

பதிவான வாக்குகள்: 1,01,44,028

மொத்த வாக்களர்கள்: 5,73,43,291

முன்னதாக 2021 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. (வித்தியாசம் : 3.89 சதவீதம்)

தேர்தல் திருவிழா: வாக்குப்பதிவு விறுவிறுப்பு: காலை 9 மணி நிலவரம்

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் எப்படி ஜனநாயக கடமைஆற்றியிருக்கிறேனோ, அதேபோல் தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்

நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனநாயக கடமையாற்றினார்.

சட்டமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை சவுந்தரராஜன்

சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது கணவர் சவுந்தரராஜன் மற்றும் மகளுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார்.

ஜனநாயக கடமையாற்றினார் எடப்பாடி பழனிசாமி

சேலம், சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

சட்டமன்ற தேர்தல்: தனது வாக்கை பதிவு செய்தார் ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது வாக்கைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர், “இந்த முறை இளம் வாக்காளர்கள் காட்டியுள்ள ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அவர்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன், ஆனால் அவர்கள் ஒரு நிலையான அரசாங்கத்திற்கும், வளர்ச்சிக்கும், நலத்திட்டங்களுக்கும் வாக்களிக்க வேண்டும். அவர்களால் ஒரு கற்பனையான யோசனைக்கு வாக்களிக்க முடியாது.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் வழங்கப்பட்ட நிலையான அரசாங்கம், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காகவே அவர்கள் வாக்களிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், இளைஞர்கள் மதச்சார்பின்மைக்கும் முன்னேற்றத்திற்கும் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுங்கள் - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்; குறிப்பாக தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக கடமையாற்றிய குஷ்பு- சுந்தர்.சி

சென்னை மந்தவெளிப்பாக்கம் ஸ்ரீ ராஜலட்சுமி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு மற்றும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி ஆகியோர் ஜனநாயக கடமையாற்றினர்.

ஜனநாயக கடமையாற்றினார் சீமான்

நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜனநாயக கடமையாற்றினார்.

தொடங்கியது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!

நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலே முதல் நபராக வாக்களித்தார் நடிகர் அஜித்குமார்

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்துள்ளார். வாக்களிக்க வந்த நடிகர் அஜித்குமார் வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்தார். வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை நடிகர் அஜித்குமார் காண்பித்தார். நடிகர் அஜித்தை காண தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

தேர்தல் திருவிழா 2026: வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டுமா..?

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அனைவரும் வந்து வாக்களிப்பதற்கான வேண்டுகோளை தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தங்களின் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாக பார்வையிட முடியும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

களத்தில் 4,023 வேட்பாளர்கள்

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.

இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்துவிட்டால், டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று வாக்களிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க முடியாது.

தமிழகத்தில் 4 முனை போட்டி

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. இதன்படி 4 முனைப்போட்டிநிலவுகிறது. இந்த தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக இன்று (23.04.2026) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்நிலையில், காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருந்தனர்.

குறிப்பிட்ட சின்னத்தின் எதிரே உள்ள பட்டனை அழுத்தினால் அதே சின்னத்திற்குதான் ஓட்டு விழுகிறதா? என்பதையும், அந்த சின்னம்தான் விவி பாட் எந்திரத்தில் தெரிகிறதா? என்பதையும் உறுதி செய்து வருகின்றனர். இப்படி 50 ஓட்டுகள் வெவ்வேறு சின்னத்தில் போட்டு சோதனை செய்யப்படுகிறது.

பின்னர் அவை எண்ணி பார்க்கப்படும். பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் சரியான கணக்கில் இருக்கும்பட்சத்தில் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு பெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com