தமிழக சட்டசபை தேர்தல்: முதல் நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல்: முதல் நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 6ம் தேதி கடைசி நாளாகும்.

அதேவேளை, 4 நாட்கள் பொதுவிடுமுறை வருவதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. இதனால், வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று 573 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 573 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com