தமிழகத்தில் 1952ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம்...? - சுவாரசிய தகவல்

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் 1952ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம்...? - சுவாரசிய தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இதில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7 ஆயிரத்து 728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேவேளை, தமிழகத்தில் 1952ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தை காண்போம்.

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 17 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வருமாறு:-

1952 - 56.41%

1957 - 46.84%

1962 - 70.65%

1967 - 76.57%

1971 - 71.82%

1977 - 61.58%

1980 - 70.74%

1984 - 73.47%

1989 - 69.69%

1991 - 63.08%

1996 - 66.95%

2001 - 59.07%

2006 - 70.82%

2011 - 78.02%

2016 - 74.81%

2021 - 73.63%

2026 - 85.00%

X

Daily Thanthi
www.dailythanthi.com