தலைமை செயலாளர் ஒருதலைபட்சமாக செயல்பட்டார்; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
தலைமை செயலாளர் ஒருதலைபட்சமாக செயல்பட்டார்; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
Published on

திருப்பத்தூர்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதனிடையே தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்தை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, தலைமை செயலாளர் மாற்றப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெற்றுள்ளது. இதில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்திற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் ஒருதலைபட்சமாக செயல்பட்டார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியதாவது,

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் ஒருதலைபட்சமாக செயல்பட்டார். தமிழகத்தை மீட்க அதிமுக கூட்டணியால் மட்டுமே முடியும். இரட்டை இலை தலைமையிலான கூட்டணியால்தான் முடியும். திமுகவுக்கு மாற்று அதிமுக கூட்டணிதான்.

200 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும். திமுக சூப்பர் ஸ்டார் இல்லை, டம்மி ஸ்டார்தான்’

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com