

சென்னை,
26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு கடந்த 30-ந்தேதி முதல் ஜூலை 29-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு உயர் பதவிகளுக்கான குரூப்-1 (Group 1 Main Exam) முதன்மைத் தேர்வு நடத்தப்படும் தேதிகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மு.ப. நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.