தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.72.24 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.72.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.72.24 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதம் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சேதடைந்த பாலங்கள், சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com