புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்கு: வடமாநில வாலிபர்கள் உள்பட 3 பேர் குண்டாசில் கைது

ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேர், திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 3 பேரும் நெல்லை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
Published on: 

நெல்லை,

நெல்லை மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய வடமாநில வாலிபர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்கு

திருப்பத்தூர் மாவட்டம், சின்னகந்திலியைச் சேர்ந்த தேவராஜ் மகன் சோமு (வயது 46), ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான மதன்புரி மகன் கிரண்புரி(28), பொகராராம் மகன் தர்மேந்திரகுமார்(21) ஆகிய 3 பேரும் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மேற்சொன்ன 3 பேரும் பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று (15.10.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com