7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவிற்கு இன்று செல்கிறார் சசிகலா

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா அங்கு செல்லாமல் இருந்தார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவிற்கு இன்று செல்கிறார் சசிகலா
Published on

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவிற்கு இன்று மாலை வருகிறார். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம், சிலை அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோடநாடுக்கு சசிகலா புறப்பட்டுள்ளார். மேலும் சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்குகிறார்.

கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர். அதன்பின் 2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா அங்கு செல்லாமல் இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com