விளையாடிக் கொண்டிருந்தபோது சோகம்... தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யோகமாயா விளையாடிக் கொண்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா (1 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது.

நேற்று மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யோகமாயா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சுமித்ரா, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்க்க வந்தபோது, வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தை மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com