தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
Published on

சென்னை,

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன.தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில்  கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் என சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com