ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!

அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும் கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரை கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக, ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்! என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com