மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேகமலை அருவி உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அபாய அளவை தாண்டி நீர்வரத்து உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திடீரென விதிக்கப்பட்ட தடையால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com